Friday, January 30, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

அம்பாந்தோட்டை, கட்டுவன பகுதியில் 5,000 ரூபா பெறுமதியான 17 போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதான சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு உதவி புரிந்த மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்ததோடு, சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, அங்கிருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரம் மற்றும் மடிக்கணினி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 38 வயதுடைய கடுவன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles