Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்தென்கொரியாவில் பரவும் காட்டுத்தீ

தென்கொரியாவில் பரவும் காட்டுத்தீ

தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

6 ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், இன்னும் தீப்பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவாமல் இருக்க குழிகளை தோண்டி தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மீட்பு படையினர் அங்கிருந்து சுமார் 300 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் 44 வீடுகள் எரிந்து சாம்பலாகின.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles