Sunday, October 12, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் மாயம்

நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் மாயம்

பலாங்கொடை, வெளிஅரனாவ நீர் தாங்கிக்கு அருகாமையில் இருக்கும் வளவ கங்கையில் நேற்று மாலை நீராடச் சென்ற இரு சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்.

15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு காணாமல் போனவர்கள் என பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களில் ஒருவர் எல்லராவ பகுதியையும் மற்றையவர் செக்னோல் வீதி பெங்ஙிவத்த பகுதியையும் சேர்ந்தவர் ஆவார்.

காணாமல் போன சிறுவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

அதேநேரம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பலங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles