Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனது பராமரிப்பாளரை கொலை செய்த நோயாளி

தனது பராமரிப்பாளரை கொலை செய்த நோயாளி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

ஆனகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நோயாளர் பராமரிப்பாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையைச் செய்த சந்தேகநபர் மனநல பாதிப்பு காரணமாக தெலிப்பலை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும், உயிரிழந்தவர் அவரை பராமரித்து வந்தவர் எனவும் கூறப்படுகிறது.

இருவருக்கு இடையில் வாக்குவாதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles