Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனா செல்லும் இலங்கை குரங்குகள்

சீனா செல்லும் இலங்கை குரங்குகள்

சீனர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, சீனாவுக்கு 100,000 செங்குரங்குகளை (டோக் மக்காக்களை) ஏற்றுமதி செய்வது குறித்து இலங்கை ஆலோசித்து வருகிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு குரங்குகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் விவசாய மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இந்த விடயம் தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக குழுவொன்றை அமைக்க, அனுமதி கோரி அமைச்சரவையில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும் என “தி மார்னிங்” செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் செங்குரங்குகளின் எண்ணிக்கை தற்போது மூன்று மில்லியனுக்கு அருகில் உள்ளதுடன் அவை, விவசாய பகுதிகளில் கணிசமான பயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கே உரிய இவ்வகை குரங்குகள், இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் அழிந்து வரும் விலங்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles