Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தக பை - காலணிகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை

புத்தக பை – காலணிகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை

பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைப் பைகள் மற்றும் காலணிகளின் விலைகள் தொடர்பில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தற்போது காலணி மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு உள்ளூர் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன. டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles