விவசாயிகளிடம் சோளம் கையிருப்பில் இருந்தால் அவற்றை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
மக்காச்சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அரசு தீர்மானித்துள்ளது.
விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் சில விவசாயிகள் சோளத்தை பதுக்கி வைத்திருந்தாலும், சோளத்தை இறக்குமதி செய்தால் விலை குறையலாம் என விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவேஇ தற்போது மக்காச்சோளத்திற்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதால், கையிருப்பில் உள்ள மக்காச்சோளத்தை விரைவில் விற்பனை செய்யுமாறு விவசாயிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.