எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தின் பல முக்கிய நகரங்களில் முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த 20 வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, ராகலை, கினிகத்தேன, புடலு ஓயா, ஹப்புகஸ்தலாவ, வட்டவளை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 10 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
ஹட்டன் மற்றும் நுவரெலியா நீதவான் நீதிமன்றங்களில்இ சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால்இ குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமிருந்தும் ஐந்து இலட்சத்து முப்பதாயிரம் ரூபா அபராதமாக வசூலிக்கப்பட்டது.
நுவரெலியா நகரில் முட்டைகளை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து 2000 முட்டைகளை நீதிமன்றம் பறிமுதல் செய்ததாகவும், பண்டிகை காலம் முடியும் வரை இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி கூறினார்.