செய்திகள்உள்நாட்டுதப்புலவின் கோப்புகள் திருடப்பட்டமை தொடர்பில் சிஐடி விசாரணை

தப்புலவின் கோப்புகள் திருடப்பட்டமை தொடர்பில் சிஐடி விசாரணை

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் அலுவலகத்திலிருந்து கோப்பு ஒன்று இனந்தெரியாத ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல்.இளங்கசிங்கவிடம் நேற்று அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாரஹேன்பிட்டி காவல்துறையிடமிருந்து பொறுப்பேற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இரவு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெள்ளை வேனில் கொழும்பு 7, லண்டன் பிளேஸில் உள்ள முன்னாள் சட்டமா அதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்து, அலுவலகத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் சோதித்த பின்னர் ஒரு கோப்பை எடுத்துச் சென்றதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளின் படி, சந்தேகநபர் சுமார் பத்து நிமிடங்கள் அலுவலகத்திற்குள் கோப்புகளை சோதித்துள்ளமை தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles