தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
சீமெந்து ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே விபத்துக்கு காரணம் எனவும், சாரதி மற்றும் சாரதி உதவியாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் சாரதியின் உதவியாளரும் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.