கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணி ஒருவரின் கைத்தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பான CCTV காட்சிகளை ஆய்வு செய்த போது அவ்வாறான திருட்டு சம்பவம் இடம்பெற்றமைக்கான ஆதாரம் எதுவும் பதிவாகவில்லை என கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருவதற்கு முன்னர் குறித்த பயணியின் கையடக்கத் தொலைபேசி மத்திய கிழக்கு நாடு ஒன்றின் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டுடன் தொடர்புடைய விமான நிறுவனம் எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் அங்கு பெறப்படும் முடிவுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.