இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த சிறுமியின் சடலம் பக்கத்து வீட்டில் உள்ள பையில் கதவில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் நொய்டாவில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த வீட்டின் உரிமையாளர்கள் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 வயதுடைய தனது மகளை காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அவரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனது பக்கத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காணாமல் போன சிறுமியின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் உதவியுடன் திறக்கப்பட்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் கதவில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சிறுமியின் பெற்றோர் இருவரும் அருகில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிவதுடன், சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றபோதும், அவரது தாயார் கடந்த வெள்ளிக்கிழமை சந்தைக்கு சென்றிருந்த போது சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.
சிறுமியை கொலை செய்ததற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.