இந்தியாவில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அந்நாட்டு மருத்துவமனைகளின் முன்னேற்பாடுகள் குறித்து கண்டறிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்றும் நாளையும் நாடு முழுவதும் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 35,000 கொவி பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டின் அதிகாரிகளின் கூற்றுப்படி, Omicron வகையின் துணை வகையாகக் கருதப்படும் XBB.1.16 மூலம் தொற்று பரவியது.
2021 ஆம் ஆண்டில், கொவிட் இந்தியாவில் வேகமாகப் பரவியது மற்றும் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் இறந்தனர்.