இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை 534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அந்த காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் 1,345 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த விபத்துக்களில் 2,446 பேர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற 21 விபத்துக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.