Wednesday, July 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉறவினர் வீட்டுக்கு செல்ல எதிர்ப்பு: கணவனை கொன்ற மனைவி கைது

உறவினர் வீட்டுக்கு செல்ல எதிர்ப்பு: கணவனை கொன்ற மனைவி கைது

உறவினர் வீடொன்றில் நிகழ்ந்த புண்ணிய தானத்திற்கு செல்ல ,கணவன் அனுமதி வழங்காததால் தூக்கத்திலேயே கணவனை மனைவி கொன்றுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வலப்பனை-பாலுகெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவரை கொன்ற மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்தவர் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், அவர் உறங்கிக் கொண்டிருந்த போது மனைவி கழுத்தை நெரித்து கொன்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles