Wednesday, November 20, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு40 எரிபொருள் நிலையங்கள் மீதான தடையை நீக்க பரிசீலனை

40 எரிபொருள் நிலையங்கள் மீதான தடையை நீக்க பரிசீலனை

QR குறியீட்டு முறைமைக்கு புறம்பான வகையில் எரிபொருள் விநியோகத்தமைக்காக, விற்பனை நிறுத்தப்பட்டுள்ள 40 எரிபொருள் நிலையங்கள், தம்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், விற்பனை இடைநிறுத்த உத்தரவை நீக்குவது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

எவ்வாறாயினும், சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக, அந்த 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, எரிபொருளை விற்பனை செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குவது குறித்து, பரிசீலித்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

QR குறியீட்டு முறைமைக்கு புறம்பாக தொடர்ந்தும் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுவந்ததால், கடந்த 6 ஆம் திகதி முதல் இந்த நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles