அடுத்தவாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு பரிந்துரைத்திருந்தது.
இந்த நிலையில் அடுத்தவாரம் தவணைப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை மாத்திரம் பாடசாலைகளுக்கு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஏப்ரல் 8ம் திகதி வரையில் தவணைப் பரீட்சைகளுக்கு தோற்றாத மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல தேவையில்லை.