யாழ்ப்பாணத்தில், நாளை முதல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு பேக்கரி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார்.
நாளை காலை முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் கோதுமை மா, எண்ணெய் மற்றும் முட்டையின் விலை குறையும் பட்சத்தில், பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந் நிலையிலேயே கூட்டுறவு பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மேற்கண்ட அறிவிப்பினை அறிவித்துள்ளது.