உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்கவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த அரசு அலுவலர்கள், ஊதியம் இன்றி விடுமுறையில் உள்ளனர்.
அவர்களுக்கு கடந்த மார்ச் 9ம் திகதி முதல் இம்மாதம் 25ம் திகதி வரையிலான காலத்தை ஊதிய விடுமுறையாக கருதி அடிப்படை சம்பளம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.