பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவிருந்தது.
எனினும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் அதனை இன்று முன்வைப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்துக்கு மாற்றீடாக இந்த புதிய சட்டத்தை அமுலாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும் இந்த சட்டமூலம் தொடர்பாக உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்படவில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்தது.
மேலும் இது ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடை சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமானது என்று பல்வேறு தரப்பினர் எச்சரித்து.
அதற்கெதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.