நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாட்கள் தொடர்பான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இந்த தொழில்சார் நடவடிக்கையினால் அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாது என நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, நீர் விநியோகம் தடைபடலாம் எனவும், இதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.