Sunday, July 13, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையின் கீழ் தேர்தலை உரிய தினத்தில் நடத்துவது சிக்கலானது என ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் கால எல்லையை கருத்தில்கொள்ளும் போது ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவது ஒருபோதும் இயலாத விடயம் என அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அவசியமான நிதி ஒதுக்கீடு இதுவரை உரிய முறையில் கிடைக்கப் பெறவில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பிரதமருடன் கலந்துரையாடலொன்றை கோரிய போதிலும், அதற்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles