பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை குறைப்புடன் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு குறித்தும் கலந்துரையாடி எதிர்வரும் இரண்டு நாட்களில் தீர்மானம் ஒன்றை அறிவிப்பதாக அதன் தலைவர் என்.கே ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.