Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு283 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

283 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது சுமார் 283 கிலோவுக்கும் அதிகம் எடை கொண்ட கேரள கஞ்சாவுடன் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினர் இந்த விசேட நடவடிக்கையின் போது மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 93 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் பேசலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles