Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேரனின் தாக்குதலில் தாத்தா - பாட்டி மரணம்

பேரனின் தாக்குதலில் தாத்தா – பாட்டி மரணம்

பதுளை – பல்லகெடுவ – நவநிவச நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் அவர்களின் பேரன் நேற்றிரவு (04) தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது 80 வயதுடைய தாத்தா உயிரிழந்தார்.

70 வயதுடைய பாட்டி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபரான பேரன், தலைமறைவாகி உள்ளதாக பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர் என கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles