எரிபொருள் விலையை குறைக்க ரணில் எதுவும் செய்யவில்லை எனவும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாகவே எரிபொருள் விலை குறைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நபமபளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பண்டிகைகளை கொண்டாட சுதந்திரம் வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு கூறி வருகிறோம். இம்முறை நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லை. கடந்த மூன்று வாரங்களுக்கு முன் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்தது. உலக சந்தையில் எரிபொருள் சலுகை வழங்கப்பட்டதாலேயே மக்களுக்கு இது கிடைத்ததே அன்றி ரணில் செய்த காரியத்தினால் அல்ல. அப்போது மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மக்களை ஒடுக்கி வரியைக் குறைக்க வேண்டும். இந்நாட்டு மக்களுக்கு நிவாரணம் கொடுங்கள். அவற்றை ஏன் கொடுக்கக்கூடாது? மக்களின் கோரிக்கைகளுக்காக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் என்றார்.