Wednesday, November 20, 2024
27.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபால் பக்கட்டை பருகிய 13 சிறுவர்கள் வைத்தியசாலையில்

பால் பக்கட்டை பருகிய 13 சிறுவர்கள் வைத்தியசாலையில்

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் பால் குடித்த 13 சிறுவர்கள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வலய பணிமனையால் வழங்கப்பட்ட பால் பக்கட்டுகளால் குறித்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு சென்ற சிறுவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்ட நிலையில், அச்சமடைந்த பெற்றோர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து குறித்த 13 சிறுவர்களும் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த பால் பக்கட் காலாவதி ஆகவில்லை எனவும், பரிசோதனைக்காக பொரளையில் உள்ள பரிசோதனை நிலையத்துக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles