Saturday, September 13, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதுகாப்பற்ற முறையில் பேருந்தில் பயணிக்கும் இளைஞர்கள்

பாதுகாப்பற்ற முறையில் பேருந்தில் பயணிக்கும் இளைஞர்கள்

நேற்று (04) மாலை வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் செல்லும் பேருந்தின் டிக்கியில் 3 இளைஞர்கள் அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

வவுனியாவில் நேற்று மாலை பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில், அந்த நேரத்தில் வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கி செல்லும் பேருந்தில் பயணித்த மூவர் மழையில் இருந்து தப்பிக்க டிக்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் வரை செல்லும் இலங்கை போக்குவரத்து சபையின் கடைசி பேருந்தில் அதிகளவான பயணிகள் பயணிப்பது வழக்கம்.

அவர்களில் கணிசமானவர்கள் ஒவ்வொரு மிதிபலகையில் ஏறி பாதுகாப்பற்ற பயணத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த வழியில் கூடுதலாக ஓரிரு பேருந்துகளை இயக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles