Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேவையானளவு திரிபோஷா விநியோகிக்கப்பட்டுள்ளது

தேவையானளவு திரிபோஷா விநியோகிக்கப்பட்டுள்ளது

19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாகவும், அதன்படி ஏப்ரல் மாதம் வரை தேவையான திரிபோஷா வழங்கப்பட்டுள்ளதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத்ன தெரிவித்தார்.

உலக உணவு ஸ்தாபனத்தினால் 11,200 மெற்றிக் டன் சோளமும், 350 மெற்றிக் டன் சோயாபீன்களும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் திரிபோஷாவின் மாதாந்தம் 19 இலட்சம் பொதிகள் தேவைப்படுவதாகவும், மேலும் நாடு முழுவதும் வாழும் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மற்றும் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷா, சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களால் வழங்கப்படுகிறது.

தமது நிறுவனம் உரிய நியமங்கள் மற்றும் சிபாரிசுகளுக்கு அமைவாக திரிபோஷாவை உற்பத்தி செய்வதோடு சுகாதார திணைக்களத்தினால் நடத்தப்படும் க்ளினிக்குகளுக்கு தேவையான திரிபோஷா கையிருப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles