பாதுகாப்புக் காரணங்களுக்காக மத்திய அரசுக்குச் சொந்தமான அனைத்து விடயங்களிலிருந்தும் டிக்டொக்கை தடைசெய்யவுள்ளதாக அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் சீனாவுக்குச் சொந்தமான வீடியோ செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அண்மைய அமெரிக்க நட்பு நாடாக அவுஸ்திரேலியா மாறியது.
இந்த தடை உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய பாதுகாப்பு நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில், அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காகப் பயனர்களின் தரவை திருடுவதற்காக பீஜிங்கை தளமாகக் கொண்ட டிக்டொக் செயலியைச் சீனா பயன்படுத்தக்கூடும் என்ற கவலைகள் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் முன்னதாக அரசாங்க விடயங்களிலிருந்தும் டிக்டொக்கை தடை செய்திருந்ததுடன், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஆணையகமும் இதே போன்ற தடைகளை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
