நெற்பயிர்செய்கைக்கு உரம் கொள்வனவு செய்வதற்காக ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபா நிதியுதவி வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேருக்கு மட்டுமே இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த யோசனையை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
