மிரிஹானையில் நடந்த போராட்டத்தின் பின்னணியில் அடிப்படைவாத குழு ஒன்று செயற்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரும் சிரேஷ்ட காவல்துறை பேச்சாளருமான அஜித் ரோஹனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அவர், அவ்வாறான ஊடக அறிக்கை குறித்த தாம் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்வதாகவும், விசாரணையின் பின்னரே எந்த விடயங்களையும் தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும், சாதாரண தண்டனைக் கோவை சட்டங்களே பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.