இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 1,005 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 3,738 ரூபாவாகும்.
5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 1,502 ரூபா)
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 700 ரூபா) ஆகும்.
