Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாண் விலையை குறைக்க அவதானம்

பாண் விலையை குறைக்க அவதானம்

சமையல் எரிவாயுவின் விலை ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளது.

டீசல், சமையல் எரிவாயு மற்றும் முட்டையின் விலைகள் அதிகரித்தபோதும், பேக்கரி உரிமையாளர்கள் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை.

கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் பாணொன்றின் விலையையும் 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையொன்று 35 ரூபாவுக்கு பேக்கரிக்கு கிடைத்தாலும், அதன் இருப்பு போதுமானதாக இல்லை.

நாட்டில் 100 பேக்கரிகளுக்கு கூட இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles