இன்று (04) முதல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் ஒரு கிராம் முட்டை 80 சதத்துக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தில் இன்று (04) முதல் கிலோ எண்ணிக்கையில் உள்ளூர் முட்டை விற்பனை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
