Sunday, November 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவசந்த முதலிகேவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்றின் உத்தரவு

வசந்த முதலிகேவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்றின் உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை ஜூன் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதி வசந்த முதலிகே நீதிமன்றில் ஆஜரானார்.

சட்டப் பிழையை திருத்திக் கொள்வதற்காகவே இந்த மனுவை இன்று அழைக்குமாறு கோரப்பட்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலான் ரத்நாயக்க நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதன்படி, வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ உரைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை ஜூன் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles