கடந்த 31ஆம் திகதி ஹேமா பிரேமதாசவுக்கு வழங்கப்பட்ட கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்தை அவர் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.
ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு ரீதியாக உத்தியோகபூர்வ இல்லத்திற்கு உரிமை உண்டு.
முன்னாள் ஜனாதிபதியின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவிக்கு அந்த இல்லத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
அந்த அடிப்படையில் ஹேமா பிரேமதாசவுக்கும் அரசாங்கத்திடம் இருந்து உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்த போதிலும், அவர் இந்த வீட்டை பயன்படுத்தவில்லை.
அவர் தனது தனிப்பட்ட வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 31ஆம் திகதி அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்ததாக ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.