Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பிலும் நிலநடுக்க வரைவிகளை நிறுவ திட்டம்

கொழும்பிலும் நிலநடுக்க வரைவிகளை நிறுவ திட்டம்

அண்மையில் பேருவளை கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்துடன், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலநடுக்க வரைவிகள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொழும்பை அண்மித்த பகுதிகளில் இருந்து மேலதிக தரவுகள் பெறப்பட வேண்டியிருப்பதால், அப்பகுதிகளில் நில அதிர்வு அளவீடுகளை இலக்கு வைத்து நிறுவ வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது பல்லேகல, மஹகனதரவ, புத்தங்கல மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் நில அதிர்வு அளவீடுகள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அண்மையில் விக்டோரியா அணைக்கட்டுக்கு அருகில் பல நிலநடுக்க வரைவிகளை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும், இத்தகைய நிலநடுக்க வரைவிகள் நாட்டின் மேற்குப் பகுதியில் நிறுவப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டின் பிரதான வர்த்தக நகரமான கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இருந்து தரவுகளை பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles