டெங்கு மற்றும் இரத்த பரிசோதனைகளுக்காக நோயாளர்களிடம் இருந்து 1450 ரூபாவை மேலதிக தொகையாக அறவிட்ட தெஹிவளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு 15 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் வரலாற்றில் தனியார் மருத்துவமனை அல்லது ஆய்வகத்திற்கு விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் இதுவென கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி ஈ. யு.ரஞ்சன தெரிவித்தார்.
டெங்கு பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்துள்ள 1200 ரூபாவுக்கு மேல் 2500 ரூபாவும், ரத்த பரிசோதனைக்காக 400 ரூபாவுக்கு மேல் 550 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது.
இரண்டு குற்றச்சாட்டுகளும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.