Tuesday, August 26, 2025
30.6 C
Colombo
செய்திகள்உலகம்இந்திய பிரதமரின் பட்டப்படிப்பு விபரம் அவசியம் இல்லை!

இந்திய பிரதமரின் பட்டப்படிப்பு விபரம் அவசியம் இல்லை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விபரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவை அந்த மாநில மேல் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

அத்துடன் இந்த விபரங்களை கேட்டதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.

இந்த அபராத பணத்தை கெஜ்ரிவால் பணத்தை குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தில் வைப்புச் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதனை ஆட்சேபித்தே குஜராத் மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles