நேற்றிரவு இடம்பெற்ற போராட்டத்தின் போது இராணுவத்துக்கு சொந்தமான பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தாக கூறப்படும் ஒருவர் காவல்துறை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே குறித்த பேருந்துக்கு தீ வைத்தார்.
அவர் அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர் என சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த நபர் “அராபி வசந்த” என்பவர் என உபுல் சன்னஸ்கல தனது சமூக வலைத்தளத்தில் பதிவட்டுள்ளார்.