Monday, May 26, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளைஞன் ஓட்டிய வேன் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயம்

இளைஞன் ஓட்டிய வேன் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயம்

சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவன் ஓட்டிச் சென்ற வேன் ஒன்று மோதுண்டதில் கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதியில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.

கொள்ளுப்பிட்டி கடல் வீதியில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வேனை நிறுத்துமாறு சைகை செய்ததாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வேனை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் சர்வதேச பாடசாலை மாணவனால் வேனைக் கட்டுப்படுத்த முடியாமல் கான்ஸ்டபிள் மீது மோதி காயப்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles