தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
லொறியொன்றின் பின்புறம் வேன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மூவரும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியின் முதல் கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாத்தறையிலிருந்து கடவத்தை நோக்கிச் சென்ற லொறியுடன் பின்பக்க வேன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் வேனை ஓட்டிச் சென்ற 25 வயதுடைய சாரதியும் 59 வயதுடைய ரஷ்ய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.