Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், இடைக்காட்டு பகுதியில் சொகுசு காரில் பெருந்தொகையான கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மாலை தொண்டைமானாறு இடைக்காட்டு பகுதியில் இருந்து சுன்னாகத்திற்கு கஞ்சா கடத்திச் செல்லும் போது குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் செலுத்திய சொகுசு காரும் 18 கிலோ கிராம் கஞ்சாவும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவரும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles