எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கிவ் ஆர் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் உரங்கள் மற்றும் விதைகள் போன்றவற்றை விவசாயிகள் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற விவசாய தொழில்முனைவோர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் தொழில் முனைவோர் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உரப்பிரச்சினையினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருடமும் உரங்களுக்கு மேலதிகமாக நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.