Monday, July 14, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவொன்று மூடப்பட்டது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவொன்று மூடப்பட்டது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவு இலக்கம் 63, விசேட வைத்தியர்கள் இன்மையால் மூடப்பட்டுள்ளது.

இந்த சிறுவர் பிரிவு அனுராதபுரம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தால் நிர்வகிக்கப்பட்டது.

இந்த பிரிவு மூன்று விசேட வைத்தியர்களின் மேற்பார்வையில் இயங்கி வந்ததாகவும், ஆனால் அந்த மூன்று மருத்துவர்களும் தற்போது மருத்துவமனையில் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.

அவர்களில் இருவர் வெளிநாடு சென்றுள்ளதுடன், மற்றைய வைத்தியர் கல்வி நிமித்தமாக வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

போதனா வைத்தியசாலையில் புதிய விசேட வைத்தியர்களை நியமிக்க முடியாத காரணத்தினால் சில தினங்களுக்கு முன்னர் 63 ஆம் பிரிவில் இருந்த நோயாளிகள் ஏனைய சிறுவர் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலைமையினால் இரண்டு பிரிவுகளிலும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles