Wednesday, January 21, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்சட்டப் பேரவையில் ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ

சட்டப் பேரவையில் ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ

திரிபுரா சட்டப்பேரவையில் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் ஜாதவ் லால் நாத் ஆபாச படம் பார்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில பாதீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

சபாநாயகரும் ஏனைய சட்ட மன்ற உறுப்பினர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் ஆபாச காணொளி பார்ப்பதை பின்னால் அமர்திருந்த எம்.எல்.ஏ ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.

அவரிடம் விளக்கம் கேட்டு, சம்மன் அனுப்பியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன், இந்த குற்றச்சாட்டுகளுக்கோ, காணொளிக்கோ அவர் பதிலளிக்கவில்லை.

கூட்டத்தொடர் முடிந்தவுடன் அவர் சட்டசபை வளாகத்தை விட்டு வெளியேறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

#NDTV

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles