Thursday, December 25, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிதியமைச்சின் செயலாளருக்கு எதிரான மனு பரிசீலனை ஒத்திவைப்பு

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிரான மனு பரிசீலனை ஒத்திவைப்பு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் மே 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்ததுடன், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் அமர்வு, மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles