கடந்த காலங்களில் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் பல சலுகைகளை கோரியதாகவும், பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் தொழிற்சங்க தலைவர்களுக்கு நான்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது, அவற்றிற்கு வரம்பற்ற எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், சில சமயங்களில் அவற்றில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.