எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சதவீத அடிப்படையில் விலையை குறைப்பது கடினம் எனவும், பேசி விலையை தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கட்டணம் அதிகரிப்பின் போது பெற்றோர், உரிமையாளர் மற்றும் ஓட்டுநருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலையைக் குறைக்கும் போதும் அவர்களுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவே எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய போக்குவரத்து கட்டணத்தை நிர்ணயிக்குமாறு கோரப்படுகிறது.